இலங்கை
அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது
அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை மற்றும் தேரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அம்பிட்டிய தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் தயா கமகேவை கடுமையான விமர்சனம் செய்தமை, தேர்தல் காலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் விமர்சனம் செய்தமை, சிங்கள பெளத்த கொள்கைகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் வெளியிடும் கருத்துக்கள் காரணமாக அவர்களுடன் உடன்படுவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவித்தமை போன்ற காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் முகநூல் பக்கத்தில் இது தொடர்பான காணொளியை அவர் பகிர்ந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சுமனரத்ன தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.