இலங்கை
ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 43 பேர் அதிரடியாக கைது
ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 43 பேர் அதிரடியாக கைது
நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் விருந்து நடத்தியதாக கூறப்படும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 10 இளம் பெண்களும், 33 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் உள்ளவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரணை மற்றும் பல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.