இலங்கை

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள கர்தினால்

Published

on

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள கர்தினால்

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ( Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களின் செயற்பாடுகளில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

நீதிமன்ற சுதந்திரத்தின் அடிப்படையில், நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கும் முழு சுதந்திரம் நீதிபதிகளுக்கு உள்ளது.

எனவே, ஒரு நீதிபதி ஒரு வழக்கை நடத்துவது அல்லது முடிவெடுப்பதில் எந்த வெளியாரும், அரசாங்கமோ அல்லது வேறுவிதமாகவோ தலையிடவோ அல்லது குறுக்கிட முயற்சிக்கவோ கூடாது என்று கர்தினால் ரஞ்சித் அறிக்கை ஒன்றில் கேட்டுள்ளார்.

அண்மையில், தங்களுக்கு பாதகமான சில தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளை விமர்சித்து, அரசு வெளியிட்ட அறிக்கைகள் தம்மை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் முழுமையான சுதந்திரம் என்பது அரசியலமைப்பின் மூலக்கல்லாகும், இது நிறைவேற்று அதிகாரம் அல்லது பிற அரசு நிறுவனங்களின் அத்துமீறலுக்கு எதிராக ஒரு அரணாக செயல்படுகிறது.

எனவே மக்கள் பாதுகாப்பின் கடைசி கோட்டையாக விளங்கும் நீதித்துறையை தாக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருவதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version