இலங்கை

இலங்கையில் தொடரும் பெரும் சோகம் – குடும்ப சுமையால் மகள் எடுத்த விபரீத முடிவு

Published

on

இலங்கையில் தொடரும் பெரும் சோகம் – குடும்ப சுமையால் மகள் எடுத்த விபரீத முடிவு

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை வெதிகும்புர வித்தியாலோக வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மோக்சா செவ்வந்தி என்ற 18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

வீட்டில் தாய், தம்பி மற்றும் அண்ணன் வசித்து வரும் நிலையில், கடந்த 24ம் திகதி காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தம்பியும் ஒரு பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். மதியம் மூன்று மணியளவில் தம்பி வந்து பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், “அம்மா எங்களால் மிகவும் கஷ்டப்படுகின்றார். அதனை பார்க்க வருத்தமாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

அதில் குடும்பத்திற்கு உணவு வழங்க முடியவில்லை என்ற இயலாமை காரணமாக பல ஆண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version