இலங்கை
திடீரென உயிரிழந்த பேருந்து சாரதி: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
திடீரென உயிரிழந்த பேருந்து சாரதி: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபையின் 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களிடமிருந்து மருத்துவ அறிக்கைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த மருத்துவ அறிக்கைகள் பெறப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிடடுள்ளது.
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த அரச பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக (23 ஆம் திகதி) இரவு 8.15 மணியளவில் உயிரிழந்திருந்தார்.
இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகி பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாத்திரம் லேசான காயம் ஏற்பட்டிருந்ததுடன், விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான விபத்து சம்பவங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை இந்த விசேட தீர்மானத்தினை எடுத்துள்ளது.