இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை கல்விச் செயற்பாடுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published

on

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை கல்விச் செயற்பாடுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் இன்று (26) ஆரம்பமாகவுள்ள நிலையில் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது .

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்திருந்தது.

இதற்கமைய, மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

விடுமுறைக் காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்குத் திரும்ப உள்ள நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version