இலங்கை
ஜனவரி முதல் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வழங்கப்பட்டுள்ள உறுதி
ஜனவரி முதல் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வழங்கப்பட்டுள்ள உறுதி
ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு திறைசேரியின் அனுமதி பெற்று முறையாக மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது.
அதனால் இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு தற்போது அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.