இலங்கை

கனடாவில் பாரிய சிக்கலை எதிர் நோக்கியுள்ள விசேட தேவையுடையோர்

Published

on

கனடாவில் பாரிய சிக்கலை எதிர் நோக்கியுள்ள விசேட தேவையுடையோர்

கனடாவில் விசேட தேவையுடையோர் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குவதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் விசேட தேவையுடையோர் ஏனையவர்களை விடவும் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனைகளினால் இரண்டு மடங்கு பாதி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் விசேட தேவையுடையோர் மத்தியில் 26 .4வீத உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சாதாரண பொதுமக்கள் மத்தியில் இந்த வீதம் 12.5 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உணவிற்கான தட்டுப்பாடு, தரமான உணவு, உணவின் அளவு, உணவு வேலைகளை தவிர்த்தல் போன்ற பல்வேறு வழிகளில் உணவு பாதுகாப்பின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version