இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அடிப்படை சுதந்திரம்: ஐ.நா குற்றச்சாட்டு

Published

on

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அடிப்படை சுதந்திரம்: ஐ.நா குற்றச்சாட்டு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய இலங்கை (Sri Lanka) தயாராகி வரும் நிலையில், நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறி்த்த விடயத்ததை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று (22) தெரிவித்துள்ளது.

ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டதன் பின்னர் தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள இலங்கை, அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த பேதிலும் அதனை இன்னும் செய்யாமல் இருக்கிறது என ஐ.நா. முகவரகம் நேற்று (22) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை அரச விரிவுப்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மற்றும், அரசாங்கம் அதன் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுருத்தல் என்பன தொடர்பாகவும் குறித்த அறிக்கை கவனஞ்செலுத்தியுள்ளது.

குறிப்பாக, இலங்கை நாடானது ஒரு முக்கிய தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்ற நிலையில், இவ்வாறானதொரு நிலை கவலையளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version