இலங்கை

ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! வஜிர அபேவர்தன பகிரங்கம்

Published

on

ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! வஜிர அபேவர்தன பகிரங்கம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, ​​பிரேமதாசவே தொடர்ந்தும் பிரதமராக இருந்தார்.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்ற போது மறைந்த ரத்னசிறி விக்ரமநாயக்க பிரதமராக இருந்தார்.

1999 இல் குமாரதுங்க தனது இரண்டாவது அமைச்சரவையை அமைத்த பின்னரும் விக்ரமநாயக்க பிரதமராகத் தொடர்ந்தார்.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வரும் ஜனாதிபதியின் கீழ் வரும் பிரதமர், அதே பதவியில் தொடர்வது வழமையாகும் என்று அபேவர்த்தன கூறியுள்ளார்

Exit mobile version