இலங்கை
குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க விசேட திட்டம்!
குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க விசேட திட்டம்!
நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகையை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு நோயாளிகள் பதிவானால் அவர்களுக்கு கொழும்பு தொற்று நோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்பய்பட்டுள்ளதாக டாக்டர் மஹிபால தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றாளியின் காயத்தை தொடுவதன் மூலமோ நீண்ட காலமாக நோய்த் தொற்றாளியின் சுவாசிக்கும் காற்றை சுவாசிக்க நேரிட்டாலோ இந்த நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த நோய்த் தொற்று வேகமாக பரவக்கூடிய அபாயம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
தொற்று நோயாளியின் படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகள் ஊடாகவும் இந்த நோய்த் தொற்று பரவக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயாளிகளிடம் காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளை காண முடியும் என அறிவித்துள்ளார்.