இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு!

Published

on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்டிருந்ததன் பிரகாரம் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றினால் வழங்கப்பட உள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் ஒன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி உள்ளிட்ட நான்கு தரப்புக்களினால் இது தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான விஜித் கே மலலால்கொட, மதுர் பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்களினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதமர், அமைச்சரவை, தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட சில தரப்பினர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version