இலங்கை

இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

Published

on

இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

போலி இணையத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இணையம் தொடர்பான 2542 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவற்றில் போலி இணையதளங்கள் தொடர்பாக 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், அறியப்படாத சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்களைப் பார்வையிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தளத்திற்கு வரும் தேவையற்ற இணைப்புக்களுக்குள் உள்நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version