இலங்கை

ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் பறிபோகும் அபாயம்! முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

Published

on

ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் பறிபோகும் அபாயம்! முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் குறித்த சின்னம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில், 2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது அமைப்புக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிலிண்டர் சின்னம் தங்களது ஜன அரகலய புரவெசியோ கட்சிக்கு உரியது எனவும் அது தங்களது கட்சிக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய சிலிண்டர் சின்னத்தை மீளப்பெறுமாறு கோரியுள்ளார்.

Exit mobile version