இலங்கை
நாட்டின் மூன்று பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ள அபாய எச்சரிக்கை..!
நாட்டின் மூன்று பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ள அபாய எச்சரிக்கை..!
களுகங்கையின் கிளை கங்கையான குடா கங்கையின் மேல் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்த 48 மணித்தியாலங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புலத்சிங்கள – மொல்காவ வீதியின் தம்பலா மற்றும் நாலியத்த ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மத்துகம, பதுரலிய மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு கடந்த 24 மணித்தியாலங்களில் எஹலியகொடவில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது,
மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு குடியிருப்பாளர்களை விழிப்புடன் இருக்குமாறு மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.