இலங்கை

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்

Published

on

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்களான சனத் நிஷாந்த மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இரு அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களும் தற்போது குறித்த இல்லத்திலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்திருந்தார்.

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் முன்னாள் அமைச்சர்களுக்கு ஆட்சிக்காலத்தில் அரசினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பயன்படுத்திய கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சரவை மீண்டும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version