இலங்கை
துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு
துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு
துருக்கியில் உள்ள தெருநாய்களைக் கொல்வதற்கு துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அந்நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
துருக்கி அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை சர்வதேச அளவில் பாரிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அனைத்து தெருநாய்களையும் கொல்ல சட்டம் பிறப்பிக்கப்படவில்லை எனவும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்யவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் 4 மில்லியன் தெருநாய்கள் வசிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், துருக்கி மக்களுக்கு பாதிப்பும், போக்குவரத்து இடையூறும், நோய் பரவுதலும் ஏற்பட்டுள்ளன.
எனினும், துருக்கி அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.