இலங்கை
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் உள்ள 20 உறுப்பினர்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 20 உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் நினைவூட்டலை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்ற தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய 169 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.
இந்நிலையில், குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத இந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.
இதேவேளை, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்கும் புதிய சட்டத்தின்படி, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொத்துப் பிரகடனத்தை சமர்ப்பிக்கத் தவறினால், ஓராண்டுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது பன்னிரெண்டு மாத ஊதியத்திற்கு சமமான அபராதம் அல்லது இரண்டையும் விதிப்பதற்கு சட்ட விதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.