இலங்கை
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
எதிர்வரும் ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும் போது, வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கண்டி (Kandy) மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, “வரி உயர்வால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் கடினமான காலமாக இருந்தது.
இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது.முதன்மை வரவு செலவு உபரியை பராமரிக்க முடிந்தது.
இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கிறது. IMF (International Monetary Fund) உடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் ஊடாக வளர்ச்சி ஏற்படுகிறது.
வரிச் சிக்கல்களைத் திருத்த IMF உடனான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.
வரும் ஆண்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும். வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் எமக்கு வாகனங்கள் இன்றி இருக்க முடியாது.
வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
கண்டி ஐக்கிய வர்த்தக முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதேசத்தின் சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.