இலங்கை

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா விலகியமை தொடர்பில் வெளியான காரணம்

Published

on

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா விலகியமை தொடர்பில் வெளியான காரணம்

பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera ) விலகிக்கொண்டமைக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பின் ஊடகப்பரப்பில் இருந்து இந்தக் காரணங்கள் கசிந்துள்ளன. முன்னதாக தாம் பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக தாமே முன்வந்து தம்மிக்க பெரேரா கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இது கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நாமல் ராஜபக்சவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும் திடீரென தம்மிக்க பெரேராவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுகயீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் அவர் போட்டியில் இருந்து தாம் விலகுவதாக கட்சிக்கு அறிவித்தார்.

இந்தநிலையில், நெருங்கிய உறவினரின் சுகயீனம் மாத்திரமல்லாமல், தமது தொழில்துறையில் பணியாற்றும் பணியாளர்களின் எதிர்காலம், தாம் ஜனாதிபதி நிலைக்கு போட்டியிடும்போது எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் எதிர் பிரசாரங்கள், தமது எதிர்காலத்தையும், பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தையும் பாழடித்துவிடும் என்ற காரணங்களாலும் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version