இலங்கை

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : எகிறப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை

Published

on

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : எகிறப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை

கடந்த காலங்களில் இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்று பல்வேறு சிக்கல்களை நாட்டு மக்கள் எதிர்கொண்டனர்.

சர்வதேசத்தில் இருந்து கிடைத்த உதவிகள், ஐஎம்எப் இடமிருந்து கிடைத்த கடன் தொகை போன்றவை ஓரளவுக்கு இலங்கை மீட்சியடை வழி வகுத்திருந்தன.

எனினும், தற்போது இலங்கை அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியதற்கான தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளது.

இந்த தேர்தல் மற்றும் தேர்தலின் முடிவுகள் என்பன அடுத்த ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இது இவ்வாறான நிலையில் எதிர்வரும் வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் மீ்ண்டும் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், பெட்ரோலியம், தங்கம் உள்ளிட்டவற்றின் விலை மிக வேகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னரான நாட்களில் ஐஎம்எப் இலங்கைக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் வரி அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளப் போகின்றனர் எனவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version