இலங்கை

விஜேதாச ராஜபக்சவை கைவிட்டார் மைத்திரி

Published

on

விஜேதாச ராஜபக்சவை கைவிட்டார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலில் விஜயதாச ராஜபக்சவுக்கு(wijeyadasa rajapaksa) ஆதரவளிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவில் இருந்து அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் விஜயதாச ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவின் அணியில் இருந்து எவரும் பங்குபற்றவில்லை.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது அணியினருடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முதலில் அறிவித்தது மைத்திரிபால சிறிசேனவே என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version