இலங்கை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது

Published

on

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தைானவர்கள் கொழும்பு (Colombo) தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 – 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று (10) நள்ளிரவு 12.30 மணியளவில் டுபாயிலிருந்து (Dubai) எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை விட்டு இவர்கள் வெளியேறும்போது, அவர்களது பயணப்பைகள் அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட வேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டெடுக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கைதான மூவரையும் சட்டவிரோதமாக கொண்டு வந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரி, சோதனை நடத்தியதன் பின்னர் கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்ததோடு, கைதான மூவருக்கும் 16 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version