அரசியல்

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Published

on

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பல்வேறு மோதல்கள் வெடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் ஒரே பக்கம் இருப்பதாகவும், யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது ராஜபக்சவின் வருகை பொருத்தமானதல்ல, எனவே சுதந்திரமாக செயற்படுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version