இலங்கை

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

Published

on

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய தருசி கருணாரத்ன முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

குறித்த, 800 மீட்டர் ஓட்டப்போட்டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் நேற்றையதினம் சனிக்கிழமை (03) நடைபெற்றுள்ளது.

முதலாவதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

ஒட்டுமொத்த நிலையில் தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற 50 பேரில் 45ஆவது இடத்தை தருசி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் ஓடி முடித்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.

இதற்கமைய, பரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையராக தருசி கருணாரட்ன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version