இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

Published

on

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய அனைத்து புலனாய்வுப் பிரிவுகளிலிருந்தும் புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தற்போதும் புலனாய்வு அறிக்கைகள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆராய தனியான புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழு, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இந்த குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்படாத வகையில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

Exit mobile version