இலங்கை

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு : 700 இற்கும் மேற்பட்டோர் கைது

Published

on

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குவதோடு சந்தேக நபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலிலும்10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 260 கிராம் 76 மில்லி கிராம் ஹெரோயின், 250 கிராம் மில்லி 02 கிராம் ஐஸ், 21,139 கிராம் மில்லி 574 கிராம் கஞ்சா,168 போதை மாத்திரைகள் மற்றும் 1,906 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version