இலங்கை
குற்றப்புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் விடுத்துள்ள கோரிக்கை
குற்றப்புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் விடுத்துள்ள கோரிக்கை
கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்துமாறு இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வியடம் குறித்து இலங்கை பாதுகாப்பு படையினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபர் பெலாரஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 8 ஆம் திகதி கிளப் வசந்தவை சுட்டுக்கொல்ல திட்டமிட்டதாக பாதாள உலக குற்றக்கும்பலின் தலைவரான லொகு பட்டி நேரடியாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்கு உதவியதாக ரொடும்பே அமில மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிளப் வசந்த் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் ‘கே.பி. என ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்த நிலையில், கஞ்சிபானை இம்ரானுக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இவர்கள் மூவரும் வெளி நாட்டில் பதுங்கியிருந்த நிலையில் கொலையை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் டுபாயில் இருந்து பெலாரஸ் நாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட போது லொகு பட்டி அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சந்தேகநபரை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை பொலிஸார் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இந்த இலங்கை பாதுகாப்பு படையினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், குற்றப்புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது.
2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பிலியந்தலை நகரின் மையப் பகுதியில் வைத்து பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவை சுட வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் லொகு பெட்டி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் தென் மாகாணத்தை மையமாகக் கொண்ட பல கொலைகள் லொகு பெட்டியின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், அவர் பல உயர் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாத நிலையில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பெலாரஸில் லொகு பெட்டியின் சகோதரர் சஞ்சீவ புஷ்பகுமார டி சில்வா மற்றும் மனைவி மார்வின் ஜனா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுடன் இருந்த கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில ஆகியோர் ரஷ்யாவிற்கு தப்பிச்செல்லும் போது அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சிபானை இம்ரான்,ரொடும்பே அமில ஆகியோர் கடந்த காலங்களில் இலங்கைக்கு பாரியளவில் போதைப்பொருள் அனுப்பியவர்கள் என்பதுடன் பல கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.