இலங்கை

முடிவில் மாற்றமில்லை: பொதுஜன பெரமுன தனியான வேட்பாளரை நிறுத்தும் என்கிறார் மகிந்த

Published

on

முடிவில் மாற்றமில்லை: பொதுஜன பெரமுன தனியான வேட்பாளரை நிறுத்தும் என்கிறார் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில்,  சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுத்திருக்கும் தீர்மானத்தில் தாம் உறுதியாக இருப்பதாகத் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இலங்கை

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், தமது கட்சி தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தும். எனினும் தேர்தலில் தனது வேட்பாளரை கட்சி முன்னிறுத்தும் என்று மகிந்த கூறியுள்ளார்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, செப்டம்பரில் நடக்கும் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு அவர்கள் இறுதி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். அதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

குறித்த முடிவை கட்சி தொடர்ந்து கடைப்பிடித்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, ரணிலுக்கு ஆதரவளிக்கத் தவறினால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மரணம் ஏற்படலாம் என்றும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரித்துள்ளது.

Exit mobile version