இலங்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்ளுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாட்டு அரசாங்கம்

Published

on

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்ளுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாட்டு அரசாங்கம்

இலங்கை (Sri Lanak) சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் நிதியுதவிகள் அதிகரிக்கப்படுவதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதன்படி நாளாந்தம் வழங்கப்படும் 250 ரூபாய் நிதியுதவி 350 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு 6 இலட்சமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டுப்படகுகளுக்கான நட்டஈடு 1.5 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், தலைமைச் செயலகத்தில் அவரைச் சந்தித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 87 பேரை சந்திக்க வசதி செய்து தருமாறு சந்திப்பின் போது, கடற்றொழிலாளர்கள், முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் கடற்றொழிலாளர்களை பார்வையிடவும், இலங்கை பிடியில் உள்ள கடற்றொழில் படகுகளை ஆய்வு செய்யவும் தூதுக்குழுவை அனுமதிப்பது குறித்து பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசுவதாக ஸ்டாலின் இதன்போது உறுதியளித்துள்ளார்

முன்னதாக தமிழக மாநில அரசு, இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 151 படகுகளுக்கு, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 6.7 கோடி ரூபாய்களை இழப்பீடாக வழங்கியுள்ளது.

இதற்கிடையில், 2018 மற்றும் 2023க்கு இடையில் பிடிபட்ட 127 படகுகள் கடலுக்குச் செல்லத் தகுதியற்றவை மற்றும் மீட்க முடியாதவை எனக் கருதப்படுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

Exit mobile version