இலங்கை

ஆபத்தான நோய் நிலைமை தொடர்பில் அறிவுறுத்தல்

Published

on

ஆபத்தான நோய் நிலைமை தொடர்பில் அறிவுறுத்தல்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 32,078 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,551 ஆகும்.

இதேவேளை, டெங்கு நோயினால் இவ்வருடம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version