இலங்கை

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

Published

on

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பாதாள உலகக்குழுவினர் அதிக மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குவது பாதாள உலகக்குழுவினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், அமைச்சரவையும் நீதிமன்றை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்படுவதாக ஓர் நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திருத்தச் சட்ட மூலம் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் நீதித்துறையை சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனவும் அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, உள்ளுராட்சி மன்ற நியமனங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவி ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் நீதிமன்றம் மூன்று தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்க்கட்சிகள் பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து மட்டுமே பேசுவதாகவும்,பொலிஸ் மா அதிபர் குறித்த உத்தரவிற்கு பாதாள உலகக் குழுவினரே அதிகம் மகிழ்ச்சியடைந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவினர் எதிர்க்கட்சிக்கு பாதுகாப்பு வழங்குவதனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version