இலங்கை

விடுதலைப் புலிகளை பிரித்த ரணில் மொட்டையும் பிரித்தார் : நாமல் ஆதங்கம்

Published

on

விடுதலைப் புலிகளை பிரித்த ரணில் மொட்டையும் பிரித்தார் : நாமல் ஆதங்கம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கியதன் ஊடாக பிளவடைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள், பல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தியது ரணில் விக்ரமசிங்கதான் என்றும் நாமல் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கினோம். எமக்கு ஏற்புடையதற்ற செயற்பாடுகளை செய்தாலும், வார்த்தையில் கூட நாம் எதுவும் சொல்லவில்லை. எனினும், கட்சி என்ற விதத்தில், கட்சியை பிளவுபடுத்தியதே எமக்கு கிடைத்த ஆதரவாகும்.

விடுதலைப் புலிகளை பிரித்த ரணில் மொட்டையும் பிரித்தார் : நாமல் ஆதங்கம் | Ranil Split The Ltte Namal Said

அதனால், எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுப்போம். நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு உண்மையாகவே உதவி புரிந்தோம். அவர் மொட்டு கட்சிக்கு அவ்வாறு செய்யவில்லை. அவரது பழக்கத்திற்கு அதனை செய்தார்.

அவரை கொண்டு வரும் போது, நாம் அதனை அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றையும் அவர் பிளவுபடுத்தினார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் நாம் இன்றும் கலந்துரையாடுகின்றோம். சரியான இடத்திற்கு வருவாரேயானால், அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவோம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version