இலங்கை

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

Published

on

200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை

பல்வேறு முறைகேடுகள் காரணமாக 200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 400 நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் 464,132 பெண் தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

இவர்களில் 3 லட்சத்து 1188 வீட்டு வேலைக்காகவும் ஏனைய ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 944 பேர் வேறு வேலைகளுக்காகவும் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களில் 3 லட்சத்து 62904 பேர் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஒரு லட்சத்து199 பேர் பயிற்றப்படாத தொழிலாளர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version