இலங்கை
ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம்
ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம்
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தாக்கல் செய்த சட்ட மூலம், வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 1500 ரூபாவாக காணப்பட்ட அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தினை திருத்தும் நோக்கில் சட்ட மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் சில சரத்துக்கள் இந்த சட்ட மூலத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையும் அதிகரிக்கும் வகையில் சட்ட மூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குழப்பம் விளைவித்தல் தொடர்பில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை 100 ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.