இலங்கை

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: இளம் யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Published

on

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: இளம் யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் இன்று (21) யுவதி முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதன்படி யுவதிகயை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் யுவதி நேற்றையதினம் (20இ07.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் பாடகி கே. சுஜிவா உட்பட 5 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 6 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version