இலங்கை

தெஹிவளை பகுதியில் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட ஐவர் கைது

Published

on

தெஹிவளை பகுதியில் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட ஐவர் கைது

தெஹிவளைகாலி வீதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அலுவலகத்தை இரும்புக்கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களினால் திருடப்பட்ட பொருட்களிலிருந்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இத்தாலி விசா பெறுவதற்காக நால்வர் பணம் செலுத்தியிருந்த நிலையில், விசா வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென நிறுவனத்திற்குள் புகுந்த சிலர் இரும்புக் கம்பியால் தாக்கி சேதம் விளைவித்து 2000 ஸ்ரெலிங் பவுண்ட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25-33 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில்,தெஹிவளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version