இலங்கை

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

Published

on

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

பூமியின் சுழற்சி வேகம் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் (Switzerland) சூரிச்சிலுள்ள ETH பல்கலை அறிவியலாளர்கள் இந்த தகவலை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பூமியின் சுழற்சி வேகம் குறைவதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

பூமி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால், துருவங்களிலுள்ள பனி உருகி, கடலில் நீர் அதிகரித்து, பூமியின் சுழற்சி வேகம் இவ்வாறு குறைவடைந்துள்ளதாக அறிவியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பூமியின் வேகம் 100 ஆண்டுகளுக்கு 1.3 மில்லி வினாடிகள் மட்டுமே குறைவடைந்துள்ளதாகவும், இதனால் நாட்காட்டிகளில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான தேவைகள் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version