இலங்கை

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

Published

on

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் வீடு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர், கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர் குவைத்தில் சில காலம் பணிபுரிந்து விட்டு நாட்டுக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த இடத்தை சேர்ந்த ஒருவரே அவரை கடத்துவதற்கான ஒப்பந்தத்தை நான்கு பேருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில குருநாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குறித்த நபர் நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் வெறுமையாக கிடந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இவரை கடத்திய சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version