இலங்கை
குறைந்த விலையில் உலங்குவானூர்தி பயணத்திற்கு பதிவு : எச்சரிக்கை
குறைந்த விலையில் உலங்குவானூர்தி பயணத்திற்கு பதிவு : எச்சரிக்கை
குறைந்த விலையில் உலங்குவானூர்தி பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இவ்வாறான செய்திகளின் ஊடாக தங்களது தனிப்பட்ட தகவல்களை மோசடியான முறையில் திருடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னரும் இதேபோன்று புல்வெளி வெட்டும் சாதனம் தொடர்பான விளம்பரம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் அதுவும் மோசடியான விளம்பரம் எனவும் அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் இவ்வாறான விளம்பரங்கள் அதிகளவில் பரவிவருவதுடன் தற்போது பரவும் உலங்குவானூர்தி பயணம் குறித்து அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.