இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

Published

on

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொக்கு பெட்டி என்ற நபரின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெலிபென்ன, குருந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களின் வீடுகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

கிளப் வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவற்றில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் காணப்படவில்லை. அதற்கமைய, சந்தேகநபர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிளப் வசந்தாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜெயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கிளப் வசந்தாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version