இலங்கை

முஸ்லிம் மாணவிகளின் வெளியிடப்படாத பெறுபேறு விவகாரத்திற்கு தீர்வு

Published

on

முஸ்லிம் மாணவிகளின் வெளியிடப்படாத பெறுபேறு விவகாரத்திற்கு தீர்வு

திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman) தலையீட்டில் அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் (Sri Lanka) பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் 70இற்கும் மேற்பட்ட திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version