இலங்கை

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

Published

on

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவில் இன்று (01) காலை ஆஜராகியுள்ளார்.

இவர் அழகு சாதனப் பொருட்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

“எனது கிரீம் ஒரு பேக் சுமார் ரூ. 35,000 மற்றும் நான் இதுவரை 25,000 பொதிகளை விற்றுள்ளேன். அவர்கள் கணிதம் செய்து எனக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று பார்க்கலாம்.

வங்கி முறை மூலம் மட்டுமே அனைத்து பரிவர்த்தனைகளையும் நாங்கள் செய்துள்ளோம் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தியுள்ளோம்.

ஏதாவது கற்றுக்கொண்டு வியாபாரம் செய்துவிட்டு கார் வாங்க முடியாதா? நான் சம்பாதித்து நல்ல கார்களை வாங்க முடியாதா?” என செய்தியாளர்களை சந்தித்தப்போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹன்சமாலி, தான் குற்றமற்றவர் என்றும், எந்தவித அச்சமும் இல்லாமல் விசாரணையை எதிர்கொவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பயன்படுத்திய 1 கோடி மதிப்பில் உள்ள Range Rover சொகுசு காரை வாங்கியுள்ளதாகவும் இவர் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் அளித்த பின்னரே விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

Exit mobile version