இலங்கை

சம்பந்தனின் மறைவை அடுத்து இரத்துச் செய்யப்பட்ட நாடாளுமன்ற அமர்வு

Published

on

சம்பந்தனின் மறைவை அடுத்து இரத்துச் செய்யப்பட்ட நாடாளுமன்ற அமர்வு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) மறைவை அடுத்து எதிர்வரும் 03ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின்இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இரா.சம்பந்தனுடைய பூதவுடல் நாளைமறுதினம் (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாளையதினம் (02) ஜனாதிபதியின் விசேட உரையை மாத்திரம் முன்வைப்பதற்கும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Exit mobile version