இலங்கை

100க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி

Published

on

100க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி

பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களில் ஆணிகள் கழன்று தளர்வான நிலையில் நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தவிர்த்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

அப்போது பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

பலாங்கொடை டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதியாக அஜித் குமார இருந்ததாகவும் அவரின் திறமையினால் விபத்து தடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று(30) காலை சுமார் 6.50 மணியளவில் பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கி பேருந்து புறப்பட்டது.

சக்கரங்கள் பழுதடைந்ததால், சாரதியின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது.இதனால் உடனடியாக சாரதி பேருந்தை நிறுத்தினார்.

பின்னர் அவர் சக்கரங்களை சரிபார்த்தபோது, ​​பின் சக்கரங்களின் ஆணிகள் கழன்று தளர்வாக இருந்ததை அவதானித்தார்.

சாரதியின் உடனடி முடிவால் குறித்த பேருந்தில் பயணித்த 100 ற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

Exit mobile version