இலங்கை

நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை- தொல். திருமாவளவன்

Published

on

நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை- தொல். திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் நடைபெற்றது.

இவ்விழாவில், தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் போதைப்பொருளை பயன்படுத்தக்கூடாது போன்ற பல அறிவுரைகளை தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது..,
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பேசிய அவர், “டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது. தமிழக அரசு முதலில் படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணத்தை நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டாஸ்மாக் கடைகளை மூடினால் மக்ககளிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது என்று கூறினார்.

மேலும் விஜய் குறித்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் ” என்று கூறினார்.

Exit mobile version