இலங்கை

கொழும்பில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: சிறுவர்கள் குறித்து வெளியான எச்சரிக்கை

Published

on

கொழும்பில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: சிறுவர்கள் குறித்து வெளியான எச்சரிக்கை

நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் (Dengue) பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் கொழும்பு (colombo) நகர்ப் பகுதியிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (National Dengue Control Unit) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி போன்ற பிரதேசங்கள் டெங்கு பரவும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிலருக்கு எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை எனவும், மேலும் சிலருக்கு டெங்கு தொற்று ஒரு சாதாரண வைரஸ் தொற்றாகக் காணப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் சிறு பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது அவசியமானது எனவும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருக்குமே காய்ச்சல் இருந்தால், அவர்கள் ஆரம்பம் முதலே ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version