இலங்கை
சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!
சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச நேற்று(27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பெய்ஜிங்கில்(Beijing) அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரிலே முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர், சீன பிரதமர் லீ கியாங்(Li Qiang) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ(Wang Yi ) ஆகியோருடன் அங்கு தங்கியிருக்கும் போது கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நினைவு நிகழ்வுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ராஜபக்ச, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.