இலங்கை

இலங்கையின் விசேட தூதுக் குழுவினர் ரஷ்யாவுக்கு விஜயம் : வெளியான தகவல்

Published

on

இலங்கையின் விசேட தூதுக் குழுவினர் ரஷ்யாவுக்கு விஜயம் : வெளியான தகவல்

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த விஜயமானது இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Waleboda) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசேட தூதுக்குழுவுக்கும் மற்றும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மொஸ்கோவில் (Moscow) இடம்பெறவுள்ளதாகவும் அத்தோடு இதன்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version