இலங்கை

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Published

on

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தின்(Tamil nadu) – இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 22 பேரை இலங்கை அரசு கைது செய்தமையைக் கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்றொழிலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை (22) காலை 507 கடற்றொழில் விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அனுமதி பெற்று தொழிலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று(23) அதிகாலை கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈபட்டுக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 22 கடற்றொழிலாளர்களை கைது செய்தனர்.

 

Exit mobile version